Melbourne, Craigieburn நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் வாகனத் தரிப்பிடத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 04 சந்தேக நபர்களைக் கண்டறிய விக்டோரியா மாநில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தப்பிச் செல்லும் போது 02 கார்களுக்கும் தீ வைத்து எரித்துள்ளதாக கூறப்படுகிறது .
துப்பாக்கிச் சூட்டில் 27 வயதான மெல்போர்ன் குடியிருப்பாளர் கொல்லப்பட்டார் மற்றும் 28 வயதான மற்றொருவர் காயமடைந்தார்.
காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வரும் நிலையில், மெல்போர்ன் பாதுகாப்பற்ற இடம் என்ற குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக விக்டோரியா மாநில காவல்துறை வலியுறுத்துகிறது.