எக்ஸ் தளத்துக்கு போட்டி எனக் கருதப்பட்டு மிகவும் பரபரப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட மெட்டாவின் திரெட்ஸ் செயலி பயன்பாடு ஆரம்பித்த 3 மாதங்களிலேயே பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, எக்ஸ் தளத்துக்கு போட்டியாக ‘திரெட்ஸ்’ என்ற செயலியைக் கடந்த ஜூலை 6 ஆம் திகதி அறிமுகப்படுத்தியது.
அந்நேரத்தில் எக்ஸ் தளத்தின் பல்வேறு கட்டுப்பாடுகள், சந்தா கட்டணம் என்று புதிய விதிகள் கொண்டுவரப்பட்டதால் எக்ஸ் தளத்துக்கு மாற்றாக இது அறிமுகப்படுத்தப்பட்டது.
அறிமுகமான வெறும் 4 மணி நேரத்தில் 50 லட்சம் பேர் இதில் இணைந்தனர்.
பயனர்கள் எளிதாக திரெட்ஸில் கணக்கு தொடங்கும்விதமாகவும் அதிகமாக பயனர்களை வரவழைக்கும் பொருட்டும் இன்ஸ்டாகிராம் கணக்கின் உள்நுழைவு விவரங்களைப் பயன்படுத்தி திரெட்ஸில் இணையலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படியே வேறு எந்த சமூக வலைத்தளமும் செய்யாத சாதனையை திரெட்ஸ் செய்தது. தொடங்கிய சில நாள்களில் அதிக பயனர்களைப் பெற்ற செயலி திரெட்ஸ் எனலாம். 5 நாட்களில் 10 கோடி பேர் இணைந்ததாக நிறுவனம் தகவல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.