40 மில்லியன் டொலர் பெறுமதியான 100 கிலோ கொக்கெய்னுடன் 5 சந்தேகநபர்கள் சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவர் சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் சரக்குகளை கையாளும் தொழிலாளர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை தென்னாபிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த சரக்கு விமானத்தின் சேமிப்பு முனைய கொள்கலனொன்றில் குறித்த கொக்கேய்ன் மிகவும் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
விமான நிலைய பணியாளர்கள் இருவரும், விமான நிலையத்திற்கு வெளியே கொக்கெய்னை எடுத்துச் சென்று காரில் வந்த 24 வயதுடைய ஒருவரிடம் கொடுத்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோசடியின் பிரதான சந்தேக நபரான 42 வயதுடைய நபரும் மற்றுமொரு நபரும் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, 24 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்ட 5 அவுஸ்திரேலியர்களும் நவம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.