Sportsஅவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து வெற்றி பெற்ற இந்தியா - உலக கிண்ண...

அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து வெற்றி பெற்ற இந்தியா – உலக கிண்ண தொடர் 2023

-

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா -அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற, அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 49.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 199 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலியா அணி சார்பில் Steven Smith 46 ஓட்டங்களையும் David Warner 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் இந்தியா அணி சார்பில் R Jadeja 3 விக்கெட்டுக்களையும் Jasprit Bumrah 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள்.

இதற்கமைய 200 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 41.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 201 ஓட்டங்களை பெற்று வெற்றியை தழுவியது.

இந்தியா அணி சார்பில் அதிரடியாக ஆடிய KL Rahul 97 ஓட்டங்களையும் V Kohli 85 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பில் Josh Hazlewood 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

நன்றி தமிழன்

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...