Breaking Newsபெற்றோர் விசா விண்ணப்பங்கள் 143,000-ஐ தாண்டியுள்ளது

பெற்றோர் விசா விண்ணப்பங்கள் 143,000-ஐ தாண்டியுள்ளது

-

பல்வேறு பெற்றோர் விசா வகைகளின் கீழ் அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்கு காத்திருக்கும் 143,000 இற்கும் அதிகமானோரின் விண்ணப்பங்கள் இன்னும் குவிந்து கிடப்பதாக தெரியவந்துள்ளது.

வருடாந்திர விசா ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 8,500 பெற்றோர் விசாக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

எனவே, ஒவ்வொரு மாதமும் பெறப்படும் புதிய விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குடிவரவுத் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையைத் தவிர்க்க, அப்போதைய லிபரல் கூட்டணி அரசாங்கம் 2019 இல் பெற்றோருக்கு 05 வருட தற்காலிக விசாவை அறிமுகப்படுத்தியது.

ஆனால் 2020-2023 காலகட்டத்தில் கிட்டத்தட்ட 9,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியா பெற்றோரின் வீசாக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

வயது முதிர்ந்தோர் எண்ணிக்கை காலவரையின்றி அதிகரித்தால், சுகாதார அமைப்பால் சமாளிக்க முடியாது என்ற அனுமானமே இதற்குக் காரணம்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...