அவுஸ்திரேலியாவில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கான்பெர்ரா நகரில் இருந்து புறப்பட்ட இலகுரக விமானம் குயின் பெயான் நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியது. சம்பவ இடத்திலேயே விமானம் தீப்பிடித்து எரிந்தது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர், ஆனால் விமானத்தில் இருந்தவர்கள் யாரும் உயிர் பிழைக்கவில்லை. விமானத்தில் இருந்த விமானி மற்றும் மூன்று குழந்தைகளும் உயிரிழந்ததாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்தனர்.
Cirrus SR 22 இலகுரக விமானம் வெள்ளிக்கிழமை மதியம் கான் பெர்ராவில் இருந்து புறப்பட்டு, சிட்னியில் இருந்து 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குயின் பெயன் நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து அவுஸ்திரேலிய விமான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விமான விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
விமான விபத்தில் கொல்லப்பட்ட நான்கு பேரில் ஒருவரான விமானி, விமானத்தில் இருந்த மூன்று குழந்தைகளின் தாத்தா 65 வயதான பீட்டர் நால்லி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குழந்தைகள் 11, 9 மற்றும் 6 வயதுடையவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.