Newsஇஸ்ரேலின் இந்த வெறுக்கத்தக்க தாக்குதலை வன்மையாக கண்டிருக்கிறோம் - ஆஸ்திரேலிய பிரதமர்

இஸ்ரேலின் இந்த வெறுக்கத்தக்க தாக்குதலை வன்மையாக கண்டிருக்கிறோம் – ஆஸ்திரேலிய பிரதமர்

-

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய பயங்கரவாத தாக்குதலினால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜேர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் இதில் அடங்கும்.

இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகேரி, தங்கள் இராணுவம் நடத்திய தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறினார். அதேபோல் காசா முனையில் ஹமாஸ் குழுவினரின் இருப்பிடங்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்புப்படை தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்நிலையில் ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய நாடுகளைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ள தனது கண்டன பதிவில், ‘இந்த நேரத்தில் இஸ்ரேலுடன் அவுஸ்திரேலியா துணை நிற்கிறது. ஹமாஸ் அமைப்பின் பாரபட்சமற்ற, வெறுக்கத்தக்க தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது’ என தெரிவித்துள்ளார். 

Latest news

செல்லப்பிராணிகளை விமானங்களில் கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ள Virgin Australia

Virgin Australia உள்நாட்டு விமானங்களில் சிறிய செல்ல நாய் அல்லது பூனையை கொண்டு வருவதற்கான ஒழுங்குமுறைக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது. முன்னர் விமானங்களில் செல்லப் பூனைகள்...

சர்ச்சையைத் தூண்டிய மெலிந்த காசா சிறுவனின் புகைப்படம்

காசாவில் மனிதாபிமான நெருக்கடியின் நிலையை விபரிக்கும் விதமாக ஒரு சிறுவனின் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வயது காசா சிறுவன், குப்பைத் தொட்டில்...

உலகில் அரிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை இரத்தம்

கர்நாடகாவைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவருக்கு உலகிலேயே புதிய வகை இரத்தம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவர் இருதய அறுவை சிகிச்சைக்காகப் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து...

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பூச்சி கண்டுபிடிப்பு

வடக்கு குயின்ஸ்லாந்தின் வெப்பமண்டல மழைக்காடுகளில் ஒரு புதிய வகை ராட்சத குச்சி பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 44 கிராம் எடையுள்ள இந்தப் பெண் பூச்சி, ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் கனமான...

சர்ச்சையைத் தூண்டிய மெலிந்த காசா சிறுவனின் புகைப்படம்

காசாவில் மனிதாபிமான நெருக்கடியின் நிலையை விபரிக்கும் விதமாக ஒரு சிறுவனின் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வயது காசா சிறுவன், குப்பைத் தொட்டில்...

அடிலெய்டில் 6 மாதத்திற்கு மூடப்படவுள்ள டிராம் பாதை

தெற்கு டெரஸ் மற்றும் க்ளெனெல்க் இடையேயான டிராம் பாதை நீட்டிக்கப்பட்டதால், அடிலெய்டு பயணிகள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் குறிப்பிடத்தக்க இடையூறுகளை எதிர்கொள்கின்றனர்.  இந்த வார இறுதியில் தொடங்கும்...