News22 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித காலடித் தடங்கள் கண்டுபிடிப்பு

22 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித காலடித் தடங்கள் கண்டுபிடிப்பு

-

நியூ மெக்சிகோவிலுள்ள வெண்மணல் தேசிய பூங்காவில் இரு ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்ட மனித காலடித் தடங்கள், சுமார் 22 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை என அறிவிக்கப்பட்டபோது எழுந்த பெரும் விவாதம் முடிவுக்கு வந்துள்ளது.

தற்போது, வேறு இரு முறைகளில் இந்தக் காலடித் தடங்களின் காலம் கணிக்கப்பட்டதில் ஏற்கெனவே கணிக்கப்பட்ட காலத்தையொட்டியே, ஏறத்தாழ ஒரேமாதிரியாக வரும் நிலையில், முந்தைய காலக் கணிப்பை உறுதி செய்வதாக அமைந்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே கருதப்பட்டதைவிடவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னதாகவே வட அமெரிக்காவிற்கு மனிதர்கள் வந்திருப்பதாக இவை உறுதி செய்கின்றன.

“உள்ளபடியே இந்தக் காலடித் தடங்கள் எவ்வளவு பழமையானவை என்பதற்கான பதில் மிகவும் சிக்கலானது” என்று குறிப்பிடுகிறார் இந்த ஆய்வில் பங்கு பெறாதவரான ஓரெகன் மாகாணப் பல்கலை தொல்லியல் வல்லுநர் லோரன் டேவிஸ்.

இப்போது நியூ மெக்சிகோ நகராக மாறிவிட்ட – ஒருகாலத்தில் பழைமையான ஏரியாக இருந்த – அதன் கரையில் பதிந்திருந்த 60-க்கும் அதிகமான மனித காலடித் தடங்களை, 2021 ஆம் ஆண்டில் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

எண்ணற்ற பாறைப் படிவங்களில் இருந்த இந்தக் காலடித் தடங்களுக்கு உள்ளும் அருகிலும் கிடந்த நீர்த் தாவரங்களின் விதைகளின் காலத்தைக் கார்பன் டேட்டிங் முறையில் கணித்ததன் மூலம் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் – சுமார் 23 ஆயிரத்திலிருந்து 21 ஆயிரம் ஆண்டுகளுக்குள் – இந்தப் பகுதியில் மக்கள் நடமாடியிருக்கலாம் எனத் தெரிய வந்தது.

இதன் மூலம், சுமார் 16 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் சைபீரியாவிலிருந்து தரைப் பாலத்தின் மூலம் வட அமெரிக்காவுக்கு மக்கள் வந்தனர் என்ற முந்தைய கருத்து வலுவிழந்தது.

எனினும், காலத்தைக் கணிக்கப் பயன்படுத்தப்பட்ட நீர்வாழ் தாவரங்களின் விதைகள், நிலத்தடி நீரிலிருந்து பழங்காலத்தைய கார்பனை உறிஞ்சி உள்ளிழுத்து வைத்திருக்கவும் கூடும், இது இயல்பாக நடக்கக் கூடியவொன்றுதான் என்றும் இரு ஆண்டுகளுக்கு முன்னர் லோரன் டேவிஸ் குறிப்பிட்டிருந்தார்.

இதுபோன்ற விமர்சனங்கள் எதிர்பார்க்கூடியவையே என்பது எங்களுக்குத் தெரியும் என்பதால் தொடக்கத்திலேயே பல்வேறு முறைகளில் காலத்தைக் கணிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்ததாக இந்த ஆய்வில் பங்குபெற்றவரான டென்வரிலுள்ள அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் புவிக்கோளவியல் ஆய்வாளர் ஜெஃப் பிகாட்டி குறிப்பிடுகிறார்.

தங்கள் கண்டுபிடிப்பை உறுதி செய்யும் நோக்கில் பிகாட்டியும் அவருடைய சகாக்களும் இவற்றில் சில காலடித் தடங்களில் படிந்திருந்த மகரந்தத் தூளையும் காலக்கணிப்புக்கு எடுத்துக்கொண்டனர். இந்த மகரந்தத் தூள் நீர்த் தாவரங்கள், பைன், ஃபிர் மரங்களுடையவை, நிலத்தடி நீரிலிருந்து கார்பனை உறிஞ்சும் பிரச்சினை இவற்றில் இல்லை. அதேபோல, மிகத் தாழ்வான இடத்திலிருந்த காலடித் தடங்களின் மீதிருந்த மணல் துகளையும், எவ்வளவு காலம் இந்த மணல் துகள் புதைந்திருந்தது என்பதை அறியும் வகையில், ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர்.

மகரந்தத் தூளின் காலம் சுமாராக 23,400 ஆண்டுகளிலிருந்து 22,600 ஆண்டுகள் பழைமையானவை. இந்த மணல் துகள்களோ குறைந்தபட்சம் 21,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று தெரிய வந்தன. இவ்விரண்டு ஆய்வுகளும் முந்தைய காலக் கணிப்பை உறுதி செய்திருக்கின்றன.

வெவ்வேறு விதமான மூன்று ஆய்வு முறைகளிலும் இவற்றின் காலம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் இனி விவாதத்துக்கு வேலையில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார் ஆய்வாளர் பிகாட்டி.

இவ்வாறு மனித காலடித் தடங்களின் காலம் பற்றிய சர்ச்சைகள் ஒருபுறம் தொடர்ந்துகொண்டே இருந்தாலும்கூட, புதிய ஆய்வு முடிவுகளிலிருந்து, அமெரிக்காவில் சுமார் 22 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் இருந்திருக்கின்றனர் என்பது உறுதியாகத் தெரிய வந்திருக்கிறது என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஏறத்தாழ தற்போதைய உருவத்திலுள்ள மனிதர்கள், ஆப்பிரிக்காவில் சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகவும் அங்கிருந்து படிப்படியாக வெளியேறி ஐரோப்பா, ஆசியா கண்டங்களின்வழியே உலகம் முழுவதும் பரவினர் என்றும் நம்பப்படுகிறது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற எண்ணற்ற தீவு நாடுகளில் எவ்வாறு, எப்போது மனித குலம் பரவியிருக்கும் என்பதெல்லாம் ஆய்வுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

Latest news

Bondi தாக்குதலுக்கு பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு மிரட்டல்

Bondi பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் மனைவி, மகள்கள் இணையத்தில் பயங்கரவாதிகள் என அழைக்கப்பட்டனர்.  Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15...

87 வயதில் தந்தையான பிரபல சீன ஓவியர்

சீனாவைச் சேர்ந்த 87 வயதுடைய பிரபல ஓவியரான பேன் செங்கிற்கு குழந்தை பிறந்துள்ளமை குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சீனாவைச் சேர்ந்த 87...

City Beach-இற்கு $14 மில்லியன் அபராதம் விதிப்பு

ஆஸ்திரேலியாவில் பிரபலமான Surf சில்லறை விற்பனையாளரான City Beach, பட்டன் பேட்டரி பாதுகாப்பு தரநிலைகளை மீறியதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக City Beachஇற்கு 14 மில்லியன் டாலர்...

Link Shareகளுக்கு பணம் வசூலிக்க Metaவின் புதிய முடிவு

Facebook பயனர்கள் ஒரு பதிவில் பகிரக்கூடிய இணைப்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த Meta ஒரு புதிய பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. இணைப்புகள் மூலம் கூடுதல் தகவல்களை இடுகையிடுவது பயனர்களுக்கு கூடுதல்...

City Beach-இற்கு $14 மில்லியன் அபராதம் விதிப்பு

ஆஸ்திரேலியாவில் பிரபலமான Surf சில்லறை விற்பனையாளரான City Beach, பட்டன் பேட்டரி பாதுகாப்பு தரநிலைகளை மீறியதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக City Beachஇற்கு 14 மில்லியன் டாலர்...

Link Shareகளுக்கு பணம் வசூலிக்க Metaவின் புதிய முடிவு

Facebook பயனர்கள் ஒரு பதிவில் பகிரக்கூடிய இணைப்புகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த Meta ஒரு புதிய பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. இணைப்புகள் மூலம் கூடுதல் தகவல்களை இடுகையிடுவது பயனர்களுக்கு கூடுதல்...