Newsஇஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்

-

ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தினர்.

குறித்த தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் கைதிகள் பரிமாற்றம் செய்ததுடன், ஈரானின் 6 பில்லியன் டொலர் பணத்தை பரிமாற்றம் செய்ய அமெரிக்கா சம்மதம் தெரிவித்ததை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து டொனால்டு டிரம்ப் தெரிவிக்கையில்,

‘கொடுமை குழந்தைகள், இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நான் உங்களுடைய ஜனாதிபதியாக இருந்தபோது, வலிமையின் காரணமாக நாம் அமைதியை பெற்றிருந்தோம்.

தற்போது நமக்கு பலவீனம், சிக்கல், குழப்பம் உள்ளது. நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இஸ்ரேலில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அட்டூழியங்கள் ஒருபோதும் நடந்திருக்காது’ என தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

Pocket Money-ஐ சேமிக்கும் குழந்தைகள் – ஆய்வில் தகவல்

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான டாலர்களை பாக்கெட் மணியாக சேமித்து வைப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நாட்டில் உள்ள பிள்ளைகள்...

ஆஸ்திரேலியர்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாக மாறியுள்ள வீட்டுக் காப்பீடு

ஆஸ்திரேலியர்களுக்கு வீட்டுக் காப்பீடு முதன்மையான பிரச்சனையாக மாறியுள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. வீட்டுக் காப்பீட்டு நிறுவனங்களை மாற்றுவதன் மூலம் நூற்றுக்கணக்கான டாலர்களைச் சேமிக்க முடியும்...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...