Sportsஆப்கானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி - உலக கிண்ண தொடர்...

ஆப்கானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 08 விக்கெட் இழப்புக்கு 272 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அணி சார்பில் அணித்தலைவர் Hashmatullah Shahidi 80 ஓட்டங்களையும் Azmatullah Omarzai 62 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் Jasprit Bumrah 4 விக்கெட்டுக்களையும், Hardik Pandya 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, 273 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 35 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் அணித்தலைவர் ரோஹித் சர்மா 131 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

மேலும், இன்றைய ஆட்டத்தின் போது ரோஹித் சர்மா இரண்டு உலக சாதனைகளை முறியடித்திருந்தார்.

உலகக்கிண்ணத் தொடரில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையைும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஆறு ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருந்தார்.

இதேவேளை, விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களையும் இஷான் கிஷான் 47 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

Latest news

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

நாய் தாக்கினால் அஞ்சல் விநியோகம் இல்லை – Australia Post

கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது. பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...

Heard தீவில் வைரஸ் உறுதி – ஆஸ்திரேலியாவிற்கும் ஆபத்து

H5 பறவைக் காய்ச்சல் வைரஸ் Heard தீவை அடைந்ததை அதிகாரிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்த யானை முத்திரைகளின் மாதிரிகளை பரிசோதித்த பிறகு, விஞ்ஞானிகள் தீவில்...

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் "அதிகாரப்பூர்வமற்ற தேசிய உணவாக" Hot Chips பெயரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஆர்டர் புள்ளிவிவரங்களை பதிவு செய்த புதிதாக வெளியிடப்பட்ட...

Uber Eats மற்றும் Menulog ஒப்பந்தத்தால் யார் பயனடைவார்கள்?

ஆஸ்திரேலிய சேவையான Menulog மற்றும் Uber Eats இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவில் Menulog முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் Uber...

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...