மருத்துவர்களின் சம்பளத்தில் புதிய வரிகளை விதிக்கும் விக்டோரியா அரசாங்கத்தின் முடிவை மருத்துவ நிபுணர் சங்கங்கள் விமர்சித்துள்ளன.
இதன் காரணமாக எதிர்காலத்தில் மருத்துவ மனைகள் மூடப்படும் அபாயம் காணப்படுவதாகவும், பொது மருத்துவக் கட்டணமாக 20 டொலர்கள் மேலதிகமாக செலுத்த வேண்டியிருக்கும் எனவும் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பான வரி விதிப்புக்கு எதிரான தொழில்முறை நடவடிக்கைகளுக்கு நோயாளிகளின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், அது தொடர்பான அறிவிப்பு பலகைகள் மருத்துவ மனை வளாகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவ சங்கங்கள் தெரிவிக்கின்றன.
உத்தேச வரி மசோதா முழு சுகாதார அமைப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக விக்டோரியா மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய ஹெல்த்கேர் நிறுவனங்களில் ஒன்று, கடந்த 10 ஆண்டுகளாகத் தங்கள் மருத்துவர்களுக்கான சம்பளப் பதிவேடுகளை வழங்குமாறு சமீபத்தில் கேட்கப்பட்டது.
இதனால் எதிர்காலத்தில் 02 முதல் 05 மில்லியன் டொலர் வரை வரி செலுத்த வேண்டியிருக்கும்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் தற்போதைய பிரதமர் ஜெசிந்தா ஆலனை சந்தித்து கலந்துரையாடி உரிய நீதியைப் பெற்றுக்கொள்ள மருத்துவ சங்கங்கள் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.