சிட்னியில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்து கொண்ட அனைவரையும் நாட்டை விட்டு நாடு கடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலிய தேசியக் கொடியை எரிப்பது போன்ற பல பயங்கரமான செயல்கள் இடம்பெற்றுள்ளமை ஆபத்தான நிலை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகள் குறித்து தொழிற்கட்சி அரசாங்கமும், பிரதமர் அந்தோனி அல்பனீஸும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பீட்டர் டட்டன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட தற்காலிக விசாவில் உள்ள அனைவரின் விசாக்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர் பரிந்துரைத்து வருகிறார்.
அவுஸ்திரேலியாவில் இனவெறிக்கு இடமளிக்கக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தெரிவித்தார்.
இதேவேளை, சிட்னியில் பயணித்த காரில் இஸ்ரேல் கொடியை காட்டிய 04 இளைஞர்களை வாய்மொழியாக அச்சுறுத்திய நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.