Newsகாசா மக்களுக்கு உதவ எல்லை கடந்து வந்தார்களா எகிப்தியர்கள்

காசா மக்களுக்கு உதவ எல்லை கடந்து வந்தார்களா எகிப்தியர்கள்

-

எகிப்தை சேர்ந்த மக்கள் எல்லை கடந்து வந்து காசா பகுதி மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து உதவியதாக தெரிவித்த ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது.

வடக்கு காசாவில் உள்ள சுரங்க பாதைகளில் ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருக்கலாம் என கருதுவதால், அங்கு தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.இதற்காக குறித்த பகுதியில் மக்களை வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்தது.

இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி காசாவின் தெற்கு பகுதி மற்றும் எகிப்து எல்லை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் மக்கள் கூட்டம் கூட்டமாக பைகளை சுமந்தபடி செல்வது பதிவாகியுள்ளது.

இவர்கள் பலஸ்தீனத்திற்கு தண்ணீர் மற்றும் உணவு பொருட்களை வழங்குவதற்காக பலஸ்தீன எல்லையை கடக்கும் எகிப்தியர்கள் என்றும், போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடனும் அந்த வீடியோவை சிலர் பகிர்ந்து வருகின்றனர்.

குறித்த வீடியோவை பார்த்தவர்கள், மக்கள் படும் துயரம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளனர், போரை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர். சிலர் அந்த வீடியோ போலியானது என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த வீடியோ எங்கு, எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து கூகுள் மூலம் ஆய்வு செய்யப்பட்டத்தில், அந்த வீடியோவானது, இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பதிவு செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது.

எகிப்து-லிபியா எல்லையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தலைப்புடன் அந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.

குறிப்பாக அப்துல்காதர் ஆசாத் என்ற பத்திரிகையாளர் கடந்த மாதம் 7 ஆம் திகதி இந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார்.

அதில், நூற்றுக்கணக்கான எகிப்தியர்கள் எல்லை வழியாக லிபியாவிற்கு சட்டவிரோதமாக செல்வதாக தெரிவித்திருந்தார்.

எனவே, தற்போது பரவி வரும் வீடியோவுக்கும், இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

குழந்தைகளுக்கு இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் கோவிட்-19 தடுப்பூசி

COVID-19 வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு இதய நோய் வருவதைத் தடுப்பதற்குப் பதிலாக, அவர்களின் இதய நோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கின்றன என்று ஒரு புதிய...

McDonald’s ஊழியர்கள் இப்போது கல்லூரி கிரெடிட்களையும் பெறலாம்!

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s, ஊழியர்கள் தங்கள் வேலைத் திறன்களைப் பயன்படுத்தி பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெறுவதற்கான ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் micro-credentials...

செயலிழப்பிற்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்ட Optus சேவைகள்

நியூ சவுத் வேல்ஸின் Hunter பகுதியில் ஏற்பட்ட மின் தடைகளுக்குப் பிறகு சேவைகள் மீட்டமைக்கப்பட்டுள்ளதாக Optus கூறுகிறது. Hexham – Maitland சாலையில் உள்ள ஒரு மொபைல்...

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

மெல்பேர்ணில் டிராம் பயணிகளுக்கு ஒரு நற்செய்தி

மெல்பேர்ணின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் Mikey Card Reader புதுப்பிப்புகள் மற்றும் புதிய டிராம்களை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட பெரிய மாற்றங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. அதன்படி,...