Sportsஇந்திய அணி அபார வெற்றி - உலக கிண்ண தொடர் 2023

இந்திய அணி அபார வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் இந்திய அணி வென்ற நிலையில் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 42.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, பாபர் அசாம் 50 ஓட்டங்களையும், மொஹம்மட் ரிஸ்வான் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா 19 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், 192 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 30.3 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக, ரோஹித் சர்மா 86 ஓட்டங்களையும், ஸ்ரேயாஷ் ஐயர் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி 02 ஓட்டக்ளுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

நன்றி தமிழ்

Latest news

5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள சில்லறை விற்பனைப் பொருட்களுக்கான செலவு

கடந்த 5 ஆண்டுகளில் சில்லறை விற்பனைப் பொருட்களுக்கான செலவு மிகப்பெரிய வருடாந்திர அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. Canstar Blue-ன் சூப்பர் மார்க்கெட் கணக்கெடுப்பு, நான்கு பேர் கொண்ட...

வயது வந்தோருக்கான ஓட்டுநர் உரிமச் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய புதிய ஆராய்ச்சி

வயதான ஓட்டுநர்களுக்கான ஓட்டுநர் உரிமச் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆய்வு ஒன்று புதிய ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. வாகனம் ஓட்டுவதற்குத் தேவையான உயர் மட்ட மனத்...

Simpson பாலைவனத்தில் 3 நாட்கள் தொடர்ந்து ஓடிய விக்டோரியர்

விக்டோரியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் Simpson பாலைவனத்தில் 380 கி.மீ தூரம் ஓடிய இளைய நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 26 வயதான Blake Bourne, ஆஸ்திரேலியாவின் மிகவும்...

சமூக ஊடகங்கள் மூலம் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் தேடும் தாய்

டாஸ்மேனிய தாய் ஒருவர் தனது பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பவர்களை சமூக ஊடகங்கள் மூலம் கண்டுபிடித்துள்ளார். ஜனவரி மாதம் Keely Walsh மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். தனது...

மேற்கு ஆஸ்திரேலிய மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக தானியா ஜெயமோகன் வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனம்

டானியா ஜெயமோகன் (Tania Jeyamohan) தனது வழக்கறிஞர் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். இது மேற்கு ஆஸ்திரேலியாவின் நீதித்துறையில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது....

தொலைபேசி வழியாக இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்கும் புதிய சாதனம்

நீரிழிவு நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றப் பயன்படுத்தப்படும் Continuous Glucose Monitor (CGM), நீரிழிவு நோயாளிகள் அல்லாதவர்களிடமும் பிரபலமாகிவிட்டது. இது தொலைபேசி வழியாக பெறப்பட்ட வரைபடம் மூலம் இரத்த...