பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு கோரி சிட்னி மற்றும் மெல்பேர்ணில் தற்போது 02 பாரிய போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மெல்பேர்னில் உள்ள பிரதான நூலகத்திற்கு முன்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
சிட்னி ஹைட் பார்க் பகுதியிலும் போராட்டம் நடத்தப்படுகிறது.
நிராயுதபாணிகளான பொதுமக்கள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.
போராட்டம் நடைபெறும் இடங்கள் அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.