Newsவாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய வசதி

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய வசதி

-

மெட்டா நிறுவனம் புதிய ஏ.ஐ. அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.

இதில் வாட்ஸ்அப் செயலிக்கான ஏ.ஐ. ஸ்டிக்கர்களை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் இடம்பெற்றுள்ளது.

இதற்கான அம்சம் பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்பட்டு வந்து நிலையில், தற்போது தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த வலைத்தள பதிவில், ஏ.ஐ. ஸ்டிக்கர் அம்சம் வாட்ஸ்அப் பயனர்களின் சாட் அனுபவத்தை மேம்படுத்தும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. Llama 2 மற்றும் Emu போன்ற தொழில்நுட்பங்களை கொண்டு மெட்டா நிறுவனத்தின் ஏ.ஐ. டூல் எழுத்துக்களை அதிக தரமுள்ள ஸ்டிக்கர்களாக உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வாட்ஸ்அப் செயலியில் ஏ.ஐ. ஸ்டிக்கர் அம்சம் ஆங்கில மொழியில் மட்டும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஏ.ஐ. ஸ்டிக்கர்களை உருவாக்க ஆங்கில மொழியில் வாக்கியங்களை வழங்க வேண்டியது அவசியம் ஆகும். இந்த புதிய அம்சம் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஸ்டோரி உள்ளிட்டவைகளில் வழங்கப்பட்டு இருக்கிறது.

வாட்ஸ்அப்-இல் ஏ.ஐ. ஸ்டிக்கர்களை உருவாக்குவது எப்படி?

வாட்ஸ்அப் சாட் செயலியில் உள்ள “More” ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

பின் “Create” மற்றும் “Continue” ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

நீங்கள் உருவாக்க நினைக்கும் ஸ்டிக்கருக்கான விவரங்களை குறிப்பிட வேண்டும்.

இனி நான்கு ஸ்டிக்கர்கள் உருவாக்கப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.

உங்களுக்கு தேவையெனில், அதில் மாற்றங்களை மேற்கொள்ளலாம்.

ஸ்டிக்கரில் க்ளிக் செய்து அதனை மற்றவர்களுக்கு அனுப்ப துவங்கலாம்.

தேவையற்ற ஸ்டிக்கர்கள் குறித்து புகார் அளிக்கும் வசதியை வாட்ஸ்அப் வழங்குகிறது. இதற்கு குறிப்பிட்ட ஸ்டிக்கரை அழுத்தி பிடித்து “>” ஐகானை க்ளிக் செய்து “Report,” பிறகு மீண்டும் “Report” ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

Latest news

விக்டோரியா காவல்துறையினரிடம் சம்பளம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள்

விக்டோரியா மாநில போலீஸ் சேவையில் சம்பள ஏற்றத்தாழ்வு பிரச்சினை இப்போது மோசமான நிலையை அடைந்துள்ளது. ஒரு மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தனது கவலையை விக்டோரியா காவல்துறை...

பாகிஸ்தான் சுரங்க விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் ஏற்பட்ட சுரங்க விபத்தின் வாயுவெடிப்பில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது. பாகிஸ்தானின் குவெட்டா நகரின் சஞ்ஜிதி பகுதியருகே அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கத்தில்...

சிறு குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு வெளியான முக்கிய தகவல்

குழந்தைகளின் மன வலிமையை மேம்படுத்தும் வகையில், சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய பயிற்சிகள் குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவயதில் இருந்தே அனைத்தையும் தாங்கும் குழந்தையாக வளர்ப்பதே இதன்...

இணைய வசதிகளை இன்னும் வேகமாக்க ஆஸ்திரேலியா தயார்

மக்களுக்கு விரைவான மற்றும் நம்பகமான மற்றும் மலிவு விலையில் இணைய வசதிகளை வழங்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்படி, அரசாங்கத்திற்குச் சொந்தமான தேசிய...

இணைய வசதிகளை இன்னும் வேகமாக்க ஆஸ்திரேலியா தயார்

மக்களுக்கு விரைவான மற்றும் நம்பகமான மற்றும் மலிவு விலையில் இணைய வசதிகளை வழங்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்படி, அரசாங்கத்திற்குச் சொந்தமான தேசிய...

இரண்டு வாரங்களுக்கு மெல்பேர்ணியர்கள் பெறும் சிறப்பு சேவைகள்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளை காண மெல்பேர்ணில் பல கூடுதல் பொது போக்குவரத்து சேவைகளை நேற்று முதல் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வார கால விளையாட்டு...