இராணுவ மோதல்கள் காரணமாக இஸ்ரேலில் சிக்கியிருந்த அவுஸ்திரேலியர்களின் மற்றுமொரு குழு நேற்று இரவு 03 விமானங்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, 1,200 பேரை வெளியேற்றுவது சாத்தியமாகியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.
இந்த குழு நேற்று இரவு ரோயல் அவுஸ்திரேலிய விமானப்படைக்கு சொந்தமான 02 விமானங்கள் மற்றும் ஒரு தனியார் விமானம் மூலம் வெளியேற்றப்பட்டது.
வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மற்றொரு விமானத்தை இயக்க முடியும் என்றும், இது இந்த வாரத்தில் கடைசி மீட்பு விமானமாக இருக்கும் என்றும் கூறுகிறது.
எவ்வாறாயினும், மீதமுள்ள ஆஸ்திரேலியர்கள் வாய்ப்பு கிடைத்தவுடன் வணிக விமானம் மூலம் டெல் அவிவில் இருந்து துபாய்க்கு வெளியேற்றப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.