பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, விக்டோரியா மாநிலத்தில் 1,000க்கும் மேற்பட்ட பால்பண்ணை தொழிலாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்க உள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்திற்கு பல முன்னணி பால் நிறுவனங்களின் ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாழ்க்கைச் செலவைக் கருத்திற்கொண்டு நியாயமான சம்பளத்தை வழங்குமாறு அதிகாரிகள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையினால் தாம் தொழில் நடவடிக்கையை மேற்கொள்வதாக சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கொவிட் தொற்றுநோய் நிலைமைகளை கருத்திற்கொண்டு, ஊழியர்கள் குறைந்தபட்ச ஊதியமான 1.5 சதவீதத்திற்கு ஒப்புக்கொண்ட போதிலும், தற்போதைய வாழ்க்கைச் செலவு காரணமாக குறைந்த கூலி நிலைமைகளின் கீழ் பணிபுரிய முடியாது என பால் உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பளத்தை வழங்காமல், 05 சதவீத சம்பள உயர்வை வழங்குமாறு ஊழியர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒப்பீட்டளவில் பால் விலை உயர்ந்த போதிலும், பால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இது தொடர்பாக நிறுவன அதிகாரிகள் எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை என்பதும் சிறப்பு.