45 அவுஸ்திரேலியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் குழுவொன்று காஸா பகுதியில் இன்னும் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர்களை எகிப்து ஊடாக வேறு நாட்டுக்கு அழைத்து வர முயற்சிப்பதாக வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் இருந்து ஆஸ்திரேலியர்களை மீட்பதற்காக இயக்கப்பட்ட அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 02 விமானங்கள், 194 பயணிகளுடன் நேற்று இரவு டெல் அவிவில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றன.
இதேவேளை, தற்போது 03 விமானங்கள் மூலம் டுபாய்க்கு அழைத்து வரப்பட்டுள்ள அவுஸ்திரேலியர்களுக்காக எதிர்வரும் வியாழக்கிழமை விசேட மனிதாபிமான விமானத்தை இயக்குவதற்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டெல் அவிவில் இருந்து லண்டனுக்கு அழைத்து வரப்பட்ட அவுஸ்திரேலியர்கள் குழுவானது குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் மூலம் இன்று சிட்னிக்கு அழைத்து வரப்படவுள்ளது.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் நாளை (18) இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.