Newsஒரே பாலின திருமண வழக்கில் இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது

ஒரே பாலின திருமண வழக்கில் இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது

-

இந்திய சிறப்புத் திருமண சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக பாராளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்கில் இந்திய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், தன்பாலின திருமணங்களுக்கான சட்ட உரிமையை நீதிமன்றங்கள் தாமாக சேர்க்க முடியாது. சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை பாராளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.வை . சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.

திருமணம் என்பது நிலையானது, மாறாதது என்று சொல்வது தவறானது. சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்வது தேசத்தை சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்துக்குக் கொண்டு சென்றுவிடும் என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஒரே பாலின திருணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் மனு மீது நான்கு விதமான தீர்ப்புகளை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கவிருப்பதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்திருந்தார்.

ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கக் கோரிய மனு மீதான தீா்ப்பை இந்திய உயர் நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பை வாசிக்கும்முன்பு, நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள நான்கு நீதிபதிகள் நான்கு விதமான தீர்ப்புகளை வழங்கவிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியிருந்ததாகவும், நீதிமன்றம் சட்டத்தை உருவாக்க முடியாது, ஆனால் அதே நேரத்தில், சட்டத்தின் சரத்துகளைக் கையாள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், திருமணம் தொடர்பான விவகாரத்தில் புதிய சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தையோ சட்டப்பேரவைகளையோ கட்டாயப்படுத்த முடியாது. பல ஆண்டுகளுக்கு முன்பு மறுக்கப்பட்ட பல விஷயங்களை இன்று நாம் ஏற்றுக்கொள்கிறோம். பல ஆண்டுகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சதி, குழந்தை திருமணம் போன்ற பல விஷயங்களை இன்று மறுக்கிறோம்.

சிறப்புத் திருமண சட்டம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனறு கருதினால் ஒரு முற்போக்கான சட்டத்தை இழக்க நேரிடலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தன்பாலின திருமணங்களுக்கான சட்ட உரிமையை நீதிமன்றங்கள் தாமாக சேர்க்க முடியாது. சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை பாராளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.வை. சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

தன்பாலின உறவு என்பது நகர்புறறத்தைச் சேர்ந்தது என்ற கருத்து உண்மையல்ல என்றும் அரசியல் சாசன அமர்வு குறிப்பிட்டது.

இந்த விவகாரம் தொடா்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதியிலிருந்து தொடா்ச்சியாக 10 நாள்கள் விசாரித்தது. தலைமை நீதிபதி டி.வை .சந்திரசூட் தலைமைலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு, தீா்ப்பை கடந்த மே 11-ஆம் தேதி ஒத்திவைத்தது.

முன்னதாக வழக்கு விசாரணையின்போது, ‘ஒரே பாலின திருமணத்துக்கு நீதிமன்றம் சட்ட அங்கீகாரம் அளிக்க முற்படும் நடவடிக்கை என்பது, தற்போதைய சூழலுக்கு சரியானதாக இருக்காது. அதனால் ஏற்படும் விளைவுகளை நீதிமன்றம் தொடா்ந்து கண்காணிக்க முடியாது. இந்த விவகாரத்தில் ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன’ என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘ஒரே பாலினத்தவா்களின் உண்மையான மனிதாபிமான பிரச்னைகளுக்குத் தீா்வு காண இந்திய மத்திய அமைச்சரவைச் செயலா் தலைமையில் குழு அமைக்கப்படும்’ என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

”பிற குடிமக்களைப் போலவே தன்பாலின ஜோடிகளுக்கும் சமூகத்தில் மற்றவர்களைப் போல சமமாக வாழ அரசியல் சாசனம் வழங்கியிருக்கக்கூடிய அடிப்படை உரிமை என்பது உள்ளது.

அதன்படி அவர்கள் யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளாத ஜோடிகள் மற்றும் தன்பாலின ஜோடிகள் இணைந்து ஒரு குழந்தையை தத்தெடுக்க முடியும் அவர்களுக்கான இந்த உரிமையை மறுக்க முடியாது.

தன் பாலின ஜோடிகளுக்கான ரேஷன் அட்டை வழங்குவது உள்ளிட்ட அரசின் சலுகைகளை வழங்குவது குறித்து அமைச்சரவை செயலாளர் தலைமையிலான குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

வழக்கமான திருமண முறை மற்றும் தன் பாலின திருமண முறை ஆகியவற்றை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக பார்க்க வேண்டும்;

பல ஆண்டுகளாக தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்ய இதுவே சரியான தருணம், எனவே தன்பாலி திருமணத்துக்கும், இணைவதற்கும் உரிய உரிமையை வழங்க வேண்டும் என்றும் இந்திய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.வை . சந்திரசூட் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

Online Visa மோசடிகள் பற்றி உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தி

ஆஸ்திரேலியர்கள் ஆன்லைன் விசா மோசடிகள் குறித்து ஜாக்கிரதையாக இருக்குமாறு உள்துறை அமைச்சகம் தொடர் சிறப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு வர எதிர்பார்த்திருக்கும் புலம்பெயர்ந்தோர் மட்டுமன்றி, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ...

ஆஸ்திரேலியாவிற்கு மீண்டும் வரவுள்ள பிரபல அமெரிக்க நிறுவனம்

அமெரிக்காவின் துரித உணவு நிறுவனமான Wendy’s தனது முதல் கடையை ஆஸ்திரேலியாவில் நாளை திறக்க உள்ளது. 2034க்குள் 200 Wendy’s கடைகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 இல்...

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ள பல விக்டோரியா காவல்துறை அதிகாரிகள்

கடந்த 5 ஆண்டுகளில், விக்டோரியா மாநில காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகள் குழு பாலியல் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறைக்கு குற்றம் சாட்டப்பட்டது. இதன்படி, குற்றம் சாட்டப்பட்ட 683...

விக்டோரியாவில் நிலச்சரிவில் சிக்கி பயங்கர விபத்துக்குள்ளான வீடு

விக்டோரியா மாநிலத்தில் மலைச் சரிவில் வீடொன்றில் மண்சரிவு ஏற்பட்டதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை 8.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் மண்சரிவினால் வீடு முற்றாக...

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ள பல விக்டோரியா காவல்துறை அதிகாரிகள்

கடந்த 5 ஆண்டுகளில், விக்டோரியா மாநில காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகள் குழு பாலியல் குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறைக்கு குற்றம் சாட்டப்பட்டது. இதன்படி, குற்றம் சாட்டப்பட்ட 683...

விக்டோரியாவில் நிலச்சரிவில் சிக்கி பயங்கர விபத்துக்குள்ளான வீடு

விக்டோரியா மாநிலத்தில் மலைச் சரிவில் வீடொன்றில் மண்சரிவு ஏற்பட்டதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை 8.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் மண்சரிவினால் வீடு முற்றாக...