Sportsதென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து அபார வெற்றி - உலக கிண்ண தொடர்...

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து அபார வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

2023- உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 43 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 245 ஓட்டங்களை பெற்றது.

பந்து வீச்சில் தென்னுப்பிரிக்கா சார்பில் Lungi Ngidi, Marco Jansen, Kagiso Rabada ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.

நெதர்லாந்து அணி சார்பில் Scott Edwards அதிகப்பட்ச 78 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 246 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

தென்னாப்பிரிக்க அணி 42.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்கை மட்டுமே பெற்றது.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் David Miller அதிகூடிய ஓட்டங்களாக 43 ஓட்டங்களை பெற்றார்.

நெதர்லாந்து அணி சார்பில் பந்து வீச்சில் Logan van Beek, 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இன்றையை போட்டியை மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டி 43 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

நாய் தாக்கினால் அஞ்சல் விநியோகம் இல்லை – Australia Post

கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது. பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...

Heard தீவில் வைரஸ் உறுதி – ஆஸ்திரேலியாவிற்கும் ஆபத்து

H5 பறவைக் காய்ச்சல் வைரஸ் Heard தீவை அடைந்ததை அதிகாரிகள் முதல் முறையாக உறுதிப்படுத்தியுள்ளனர். இறந்த யானை முத்திரைகளின் மாதிரிகளை பரிசோதித்த பிறகு, விஞ்ஞானிகள் தீவில்...

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு

2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் "அதிகாரப்பூர்வமற்ற தேசிய உணவாக" Hot Chips பெயரிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஆர்டர் புள்ளிவிவரங்களை பதிவு செய்த புதிதாக வெளியிடப்பட்ட...

Uber Eats மற்றும் Menulog ஒப்பந்தத்தால் யார் பயனடைவார்கள்?

ஆஸ்திரேலிய சேவையான Menulog மற்றும் Uber Eats இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. நவம்பர் 26 ஆம் திகதி நள்ளிரவில் Menulog முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் Uber...

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...