உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (20) பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீசத் தீர்மானித்தது.
அதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 367 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 163 ஓட்டங்களை டேவிட் வார்னர் பெற்றதுடன் மிட்செல் மார்ஷ் 121 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அதன்படி, 368 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 305 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
பாகிஸ்தான் அணி சார்பில் ஹிமாம் ஹுல் ஹக் 70 ஓட்டங்களையும், அப்துல்ஹா சாதிக் 64 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் எடம் சம்பா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்த வெற்றியை தொடர்ந்து அவுஸ்திரேலியா அணி 2023 உலகக்கிண்ணத் தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.