Newsவாட்ஸ்அப் செயலி அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி

வாட்ஸ்அப் செயலி அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி

-

வாட்ஸ்அப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியின் பயன்பாடு இன்றைய காலத்தில் அதிகரித்து விட்டது. ஸ்மார்ட் கைத்தொலைபேசி பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்-அப் செயலியும் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது.

பயனர்களின் தேவைக்கு ஏற்ப புதிய வசதிகளை அவ்வப்போது வாட்ஸ்அப் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் சேனல், லோக் சோட் உள்ளிட்ட வசதிகள் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ‘இதன்மூலம் பயனர்கள் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை பயன்படுத்த முடியும். கைத்தொலைபேசி இரண்டு வாட்ஸ்அப் செயலிகள் வைத்திருக்க தேவை இல்லை’ என தெரிவித்துள்ளார்.

இந்த வசதி முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வசதியின் பயன்கள்:

முன்னதாக ஒருவர் இரண்டு கைத்தொலைபேசிகளில் எண்கள் வைத்திருந்தால் தனி தனியாக இரண்டு வாட்ஸ்அப் செயலிகள் பயன்படுத்த வேண்டி இருந்தது. ஆனால் தற்போது இந்த புதிய வசதியின் மூலம் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை நிர்வகிக்க முடியும்.

சில சாதனங்களில் இரண்டு வாட்ஸ்அப் செயலிகள் தரவிறக்கம் செய்ய முடியாத நிலை இருந்ததால் பயனர்கள் பல இன்னல்களை சந்தித்தனர். ஒரு சிலர் இரண்டு கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது இந்த அப்டேட் மூலம் அவர்களின் சிக்கல் தீர்ந்துள்ளது.

இந்த வசதியை வாட்ஸ்அப் அமைப்புகளில் சென்று உங்கள் பெயர் இருக்கும் இடத்திற்கு நேராக இருக்கும் அம்புக்குறியை கிளிக் செய்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...