ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனமான குவாண்டாஸ் மற்றும் அதனுடன் இணைந்த குறைந்த கட்டண விமான நிறுவனமான ஜெட்ஸ்டார் ஆகியவை விமான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளன.
இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானக் கட்டணங்கள் 03 முதல் 3.5 வீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளன.
உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு, மத்திய கிழக்கின் நிலைமை காரணமாக ஆஸ்திரேலிய டாலர் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல காரணிகள் இதனை பாதித்துள்ளதாக குவாண்டாஸ் குழுமம் அறிவிக்கிறது.
எவ்வாறாயினும், இந்தக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட காலம் தொடர்பில் விமானப் பயணச்சீட்டு முகவர் மற்றும் பயண முகவர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தில் அதிகளவான மக்கள் விடுமுறைக்கு செல்ல தயாராகி வரும் நிலையில் இந்த கட்டணங்களை அதிகரிப்பது நியாயமற்றது என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.