பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் ஆளும் தொழிலாளர் கட்சியின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்துள்ளது.
பூர்வீகக் குரல் வாக்கெடுப்பில் ஏற்பட்ட தோல்வியே முக்கிய காரணம் என ஸ்கை நியூஸ் மீடியா இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் பிரதமரின் செல்வாக்கு வேகமாக குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வாஷிங்டனுக்கு வந்துள்ளார்.
AUKUS ஒப்பந்தத்தின் கீழ் நீர்மூழ்கிக் கப்பல் கொள்முதல் ஒப்பந்தம் மற்றும் சீன உறவுகள் மற்றும் மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும்.
இன்னும் 02 வாரங்களில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் முன்னர் அவுஸ்திரேலியா பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியமையும் விசேட அம்சமாகும்.