ஆஸ்திரேலியாவின் முக்கிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா சீனாவை முந்தியுள்ளது.
பல பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து ஆஸ்திரேலிய வணிக உரிமையாளர்கள் சீனாவிலிருந்து தங்களைத் தூர விலக்கிக் கொள்ளச் செயல்படுவதாக ஆஸ்திரேலிய வர்த்தக சபை அறிக்கைகள் காட்டுகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுடன் இருதரப்பு சந்திப்பிற்காக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்த நாட்களில் அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ள போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.
ஓக்ஸ் போன்ற பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலம் ஆஸ்திரேலியா-அமெரிக்க உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளதாக Wye Chamber of Commerce குறிப்பிடுகிறது.