ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான டொயோட்டா CHR மாடல்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
எரிபொருள் பம்ப் பழுதானதே இதற்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
திடீர் தீ விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு கூட நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2019-2023 காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 14,480 Toyota CHR வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(C-HR 2WD 1.2L பெட்ரோல் மாடல் மற்றும் C-HR AWD 1.2L பெட்ரோல் மாடல் உட்பட C-HR பெட்ரோலின் (NGX10 & NGX50) பல வகைகள் ஆபத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய டொயோட்டா முன் வந்துள்ளது.