குயின்ஸ்லாந்து மாநிலம் முழுவதும் மேலும் 2500 மின்சார கார் சார்ஜிங் நிலையங்களை நிறுவ மாநில அரசு தயாராகி வருகிறது.
அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், மாநிலம் முழுவதும், ஒவ்வொரு 150 கி.மீ.க்கு, புதிய எலக்ட்ரிக் கார் சார்ஜிங் நிலையங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக 42 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோல்ட் கோஸ்ட்டின் பொதுப் போக்குவரத்து நிலையங்களில் ஏற்கனவே சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குயின்ஸ்லாந்து போக்குவரத்து அமைச்சர் மார்க் பெய்லி, மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதும், அதற்கான கூடுதல் வசதிகளை வழங்குவதும் மாநில அரசின் நோக்கம் என்று கூறியுள்ளார்.
மருத்துவமனைகள், திரையரங்குகள் மற்றும் மாநாட்டு அரங்குகள் போன்ற பொது இடங்களில் பல மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட உள்ளன.
அவசியமான சில இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் இல்லாததால் மின்சார வாகன உரிமையாளர்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதோடு எதிர்காலத்தில் அசெளகரியங்கள் குறையும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.