விக்டோரியாவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரசல் நோர்த் கிட்டத்தட்ட 02 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 180,000 டாலர்கள் பொதுப் பணத்தைப் பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டு பொதுப் பணத்தை தவறாகப் பயன்படுத்தியமை அவருக்கு எதிரான குற்றச்சாட்டு.
57 வயதான முன்னாள் எம்.பி இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, மெல்போர்ன் மாநகர நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
12 மாத சிறைத்தண்டனையை அனுபவித்த பிறகு இந்த 21 மாத சிறைத்தண்டனை தொடர்பாக அவர் ஜாமீன் கோர முடியும்.
விக்டோரியாவின் ஊழல் எதிர்ப்பு ஆணையம் இந்த தவறை வெளிக்கொண்டு வந்ததையடுத்து, கடந்த ஆண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரசல் நோர்த் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.