சிட்னி மற்றும் மெல்போர்ன் நகர சபைகள் இரண்டும் படிம எரிபொருட்களின் பயன்பாட்டை படிப்படியாக நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அதன்படி, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள், புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் எதிலும் எரிபொருள் அல்லது எரிவாயு பயன்படுத்தப்படாத நிலைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களில் 2040 ஆம் ஆண்டிற்குள் மின்சாரத்தை பிரதான மற்றும் ஒரே ஆற்றல் ஆதாரமாக மாற்றும் இலக்கை அடைவதும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய இலக்காகும்.
விக்டோரியன் மற்றும் மாநில அரசாங்கங்கள் ஏற்கனவே இதேபோன்ற இலக்குகளை அறிவித்துள்ளன.
இது மத்திய அரசின் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு திட்டத்திற்கு ஆதரவாக உள்ளது.