Sports309 ஓட்டங்களால் நெதர்லாந்தை வீழ்த்திய அவுஸ்திரேலியா - உலக கிண்ண தொடர்...

309 ஓட்டங்களால் நெதர்லாந்தை வீழ்த்திய அவுஸ்திரேலியா – உலக கிண்ண தொடர் 2023

-

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியா அணி 309 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 399 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலியா சார்பில் Glenn Maxwell 106 ஓட்டங்களையும், David Warner 104 ஓட்டங்களையும், Steven Smith 71 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் நெதர்லாந்து அணி சார்பில் Logan van Beek அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 400 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 21 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 90 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

அந்த அணி சார்பில் Vikramjit Singh அதிகபட்சமாக 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பில் Adam Zampa 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

நன்றி தமிழன்

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...