கோல்ட் கோஸ்ட்டில் இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது 30 மில்லியன் டொலர் பெறுமதியான சட்டவிரோத போதைப் பொருட்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அந்தந்த சோதனைகளின் போது, ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் இருந்து $20,000 கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு ஆபத்தான போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் அவர்களுக்கு உதவி செய்தமை உள்ளிட்ட ஆறு குற்றங்களுக்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களில் 27 கிலோ ஐஸ் வகை போதைப்பொருள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





