பொய்யான வரிக் கணக்குகளைச் சமர்ப்பித்து கிட்டத்தட்ட 70,000 டொலர்களை மீளப் பெற்ற நியூ சவுத் வேல்ஸ் பெண் ஒருவருக்கு 02 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் சந்தேக நபர் இந்தத் தொகையைப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 192,000 டொலர் பெறுவதற்கான ஆவணங்களை அவர் சமர்ப்பித்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை 56,000 பேர் வரி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
அங்கு வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை 300 மில்லியன் டாலர்களுக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.