Sportsபாகிஸ்தானை வீழ்த்தியது தென்னாபிரிக்கா - உலக கிண்ண தொடர் 2023

பாகிஸ்தானை வீழ்த்தியது தென்னாபிரிக்கா – உலக கிண்ண தொடர் 2023

-

2023 – உலகக் கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது.

அதன்படி இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 270 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, சவுத் ஷகீல் 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில், தென்னாபிரிக்க அணியின் தப்ரைஸ் ஷம்சி 60 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்தநிலையில், 271 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 47.2 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி பெற்றது.

அணிசார்பில் அதிகபடியாக எய்டன் மார்க்ரம் 91 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்ரிடி 45 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய மாநிலத்தில் போக்குவரத்துச் சட்டங்களில் புதிய மாற்றம்

ஜூலை 13 முதல் ஆஸ்திரேலிய மாநிலம் ஒன்றில் புதிய போக்குவரத்துச் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவில் மின்-ஸ்கூட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்படுகின்றன. மேலும் மிதிவண்டி அல்லது மின்-ஸ்கூட்டர்களை ஓட்டுபவர்களுக்கு...

ஆஸ்திரேலியா வரும் ஆசிய சுற்றுலாப் பயணிகள் குடிபோதையில் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு

சர்வதேச விமானங்களில் ஆஸ்திரேலியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவர்கள் மது அருந்திவிட்டு ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாகவும் ஆஸ்திரேலிய எல்லைப் படை தெரிவித்துள்ளது. பல...

பிளாஸ்டிக் பொருட்களில் 4,200 ரசாயனங்களை தடை செய்ய கோரிக்கை

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்தப்படும் 4,200க்கும் மேற்பட்ட ரசாயனங்களை தடை செய்ய விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு...

HIV நோயாளிகள் இறக்கும் அபாயத்தில் – ட்ரம்ப்பே காரணம்

உலகளாவிய HIV தடுப்பு நடவடிக்கைக்கான நிதியை அமெரிக்கா நிறுத்தியதால், 2029 ஆம் ஆண்டுக்குள் HIV தொடர்பான இறப்புகள் மில்லியன் கணக்கில் அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகள்...