குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பல இடங்களில் காட்டுத் தீயின் நிலைமை கடுமையாக மாறியுள்ளது.
தற்போது 60 இடங்களில் காட்டுத் தீ பரவி வருவதாக பேரிடர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பல இடங்களில் காட்டுத் தீ காரணமாக இந்த வாரத்தில் மட்டும் 32 வீடுகள் முற்றாக நாசமாகியுள்ளன.
சுமார் 20,000 ஹெக்டேர் நிலம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பல இடங்களில் எதிர்வரும் நாட்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காட்டுத் தீ நிலைமைகள் ஓரளவு கட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.