Sportsநியூசிலாந்தை வீழ்த்தியது அவுஸ்திரேலிய அணி - உலக கிண்ண தொடர் 2023

நியூசிலாந்தை வீழ்த்தியது அவுஸ்திரேலிய அணி – உலக கிண்ண தொடர் 2023

-

2023 – உலகக் கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சைத் தெரிவுசெய்தது.

இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 388 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் அதிகபட்சமாக 106 ஓட்டங்களை டிராவிஸ் ஹெட் பெற்றதுடன் டேவிட் வார்னர் 81 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில்,நியூசிலாந்து அணியின் க்ளென் பிலிப்ஸ் மற்றும் டிரெண்ட் போல்ட் 03 விக்கெட்டுக்களையும் மிட்செல் சான்ட்னர் தலா இரு விக்கெட்டுக்களையும் மாட் ஹென்றி ஒரு விக்கட்டையும் கைப்பற்றினர்.

இந்தநிலையில், 389 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து ஓட்டங்களை 383 மாத்திரம் பெற்ற நிலையில்அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணிசார்பில் அதிகபடியாக ரச்சின் ரவீந்திரன் 116 ஓட்டங்களையும் டேரில் மிட்செல் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில்,அவுஸ்திரேலிய அணியின் ஆடம் ஜம்பா 74 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் தலா இரு விக்கெட்டுக்களையும் கிளென் மேக்ஸ்வெல் ஒரு விக்கட்டையும் கைப்பற்றினர்.

Latest news

விக்டோரியாவில் தேர்வுகள் தொடர்பில் மாநில அரசு விடுத்துள்ள உத்தரவு

விக்டோரியாவில் உள்ள பள்ளிகளில் 12 ஆம் ஆண்டு தேர்வுகளை மேற்பார்வையிடும் அமைப்பை மறுஆய்வு செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பரீட்சை தொடர்பான சில மாணவர்களுக்கு இணையத்தில் மாதிரி...

விக்டோரியா பிரதமரின் தலைமைத்துவம் பற்றி எழுந்துள்ள கேள்வி

விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலன் தலைமையில் மாநில அரசு பிளவுபட்டுள்ளதாக விக்டோரியா எதிர்க்கட்சித் தலைவர் ஜான் பெசுடோ தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர், தொழிலாளர் கட்சி எம்.பி.க்கள்...

NSW போக்குவரத்து அபராத முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு டிக்கெட் இல்லாமல் பார்க்கிங் அபராதம் விதிக்க தடை விதித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த அபராத முறையின்...

ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இலங்கை செல்லும் 5 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள்

நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் 61 ஆயிரத்து 767 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் ஒரு...

ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இலங்கை செல்லும் 5 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள்

நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் 61 ஆயிரத்து 767 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் ஒரு...

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளது. இது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகவும், நீல திமிங்கலத்தை விட பெரியதாகவும்...