மெல்போர்ன் ஃபெடரேஷன் சதுக்கத்தில் பாலஸ்தீனக் கொடி காட்சிப்படுத்தப்பட்டது தொடர்பாக சர்ச்சைக்குரிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூரும் வகையில் பலஸ்தீன அனுதாபிகளால் 09 கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இது தொடர்பில் மெல்போர்ன் யூத சமூகம் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான பிரிவினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது செப்டம்பர் 11 தாக்குதலுக்கு மறுநாள் தலிபான் கொடி காட்டப்பட்டதைப் போன்றது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் இது திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், 12 மாதங்களுக்கு முன்பு பெறப்பட்ட அனுமதியின் அடிப்படையில் இது நடைமுறைப்படுத்தப்பட்டது என்றும் பலஸ்தீன அனுதாபிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பலஸ்தீன தேசிய தினத்தை கொண்டாடும் நோக்கில் கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.