Cinemaசர்ச்சையில் சிக்கிய அனிருத்

சர்ச்சையில் சிக்கிய அனிருத்

-

லியோ படத்தில் ‘ஆர்டனிரி பர்சன்’ பாடலை அனிருத் காப்பி அடித்து இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

இசையமைப்பாளர் அனிருத் ஆரம்பத்தில் தனுஷின் 3 படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலைவெறிடி பாடல் மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தார்.

சமீபத்தில் அனிருத் இசையில் ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வந்தன. இந்த நிலையில் லியோ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆர்டனிரி பர்சன்’ என்ற பாடலை ஐரோப்பாவின் பெலரஸ் நாட்டை சேர்ந்த இசைக்கலைஞர் ஒட்னிகாவின் ‘வேர் ஆர் யூ” பாடல் ஆல்பத்தில் இருந்து அனிருத் காப்பி அடித்து இருப்பதாக ரசிகர்கள் சர்ச்சை கிளப்பி சமூகவலைத்தளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

ஒட்னிகாவுக்கும் தகவல்கள் அனுப்பினர். இது குறித்து ஒட்னிகா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘லியோ படத்தின் பாடல் குறித்து எனது மின்னஞ்சல் இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் கமெண்ட் செய்துவருவதை பார்த்தேன். அதற்கு நன்றி.இந்த சர்ச்சை குறித்து எனக்கு தெளிவாக எதுவும் தெரியவில்லை. இது குறித்து ஆய்வு செய்ய நேரம் கொடுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...