Sportsஇந்திய அணி அபார வெற்றி - உலக கிண்ண தொடர் 2023

இந்திய அணி அபார வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 100 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 229 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் அதன் தலைவர் Rohit Sharma அதிகபட்சமாக 87 ஓட்டங்களையும் Suryakumar Yadav 49 ஓட்டங்களையும் KL Rahul 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் David Willey 3 விக்கெட்டுக்களையும் Chris Woakes மற்றும் Adil Rashid தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினா்.

இதன்படி ,230 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 34.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 129 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இங்கிலாந்து அணி சார்பில் Liam Livingstone அதிகபட்சமாக 27 ஓட்டங்களை பெற்ற அதேவேளை ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடனேயே ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Mohammed Shami 04 விக்கெட்டுக்களையும், Jasprit Bumrah 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியுடன் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

Latest news

அமெரிக்காவின் தேசிய பறவையாக வெண்தலைக் கழுகு தேர்வு

அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதாவில் ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பமிட்டு உறுதி செய்தாா். வெண்தலைக் கழுகுகள் அறிவியல் ரீதியாக “ஹாலியேட்டஸ் லுகோசெபாலஸ்”...

முதல் முறையாக வெளிநாடு செல்லும் காதலர்களுக்கான அறிவுரை

மனைவியுடன் முதல்முறையாக வெளிநாட்டுப் பயணத்தைத் திட்டமிடுபவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் வழிகாட்டிகளை 'சிஎன் டிராவலர்' வெளியிட்டுள்ளது என்பதும் சிறப்பு. அதன்படி, அவர்கள் தங்களது முதல் வெளிநாட்டுப்...

விக்டோரியாவில் உள்ள நீரில் கண்டறியப்பட்டுள்ள ஒரு அசாதாரண வைரஸ்

விக்டோரியாவில், எங்கள் நீரில் ஒரு அசாதாரண வைரஸ் போக்கு ஏற்பட்டதை அடுத்து, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் நடத்தப்பட்ட வழக்கமான கழிவுநீர் மாதிரி சோதனையின் போது இது...

பளு தூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட 90 வயது பெண்

தைவானின் தைபே நகரில் நடைபெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட பளுதூக்கும் போட்டியில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பங்கேற்றுள்ளார். மூன்று சுற்று போட்டியின் போது,...

பளு தூக்குதல் போட்டியில் கலந்துகொண்ட 90 வயது பெண்

தைவானின் தைபே நகரில் நடைபெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட பளுதூக்கும் போட்டியில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பங்கேற்றுள்ளார். மூன்று சுற்று போட்டியின் போது,...

சாதனை படைத்தது MCG-யின் முதல் நாள் வசூல்

மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) 26ம் திகதி தொடங்கிய Boxing Day டெஸ்ட் போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். அதன்படி, முதல் நாளில் Boxing Day...