விக்டோரியாவில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நேற்று நடைபெற்ற VCE பரீட்சை வினாத்தாளில் பிழைகள் ஏற்பட்டமைக்காக அம்மாநில கல்வி அமைச்சரும் பிரதிப் பிரதமருமான பென் கரோல் மன்னிப்புக் கோரியுள்ளார்.
பொதுக் கணிதப் பாட வினாத்தாளில் 02 பிழைகள் காணப்படுவதாக பெருமளவானோர் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதிப்பெண்கள் வழங்கும் போது இது தொடர்பாக நியாயம் வழங்கப்படும் என்றும் பென் கரோல் உறுதி அளித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்துவதாக விக்டோரியா மாநில அரசு உறுதியளித்துள்ளது.
விக்டோரியா மாநில கல்வி அமைச்சரும் துணைப் பிரதமருமான பென் கரோல், வினாத்தாள்கள் அச்சிடுவதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் சரிபார்க்கப்படும் சூழ்நிலையில் இது எப்படி நடந்தது என்பதை ஆராய்வோம் என்று வலியுறுத்துகிறார்.