இன்றைய ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு முகமூடிகளை அணிந்து வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆஸ்திரேலியர்கள் ஹாலோவீன் சமயத்தில் பிரபலமான பூசணிக்காய் முகத்தையோ அல்லது இதுபோன்ற பிற பொருட்களையோ அணிந்து கொண்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சாலைப் போக்குவரத்து ஆணைச் சட்டம் 1961 இன் சட்டம் 297 இன் படி, ஓட்டுநர் தான் ஓட்டும் வாகனத்தை சரியான முறையில் கட்டுப்படுத்துவதும், முன்னால் உள்ள சாலை தெளிவாகத் தெரியும் வகையில் வாகனத்தை வைத்திருப்பதும் கட்டாயமாகும்.
இந்த விதிமுறைகளை மீறினால் குயின்ஸ்லாந்தில் $361 / தெற்கு ஆஸ்திரேலியாவில் $215 / நியூ சவுத் வேல்ஸில் $514 மற்றும் விக்டோரியாவில் $288 அபராதம் விதிக்கப்படலாம்.
மேலும் குற்றத்தின் தன்மையைப் பொறுத்து, நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டால், விக்டோரியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் முறையே $962 மற்றும் $1500 அபராதம் விதிக்கப்படலாம்.