பொது போக்குவரத்து சேவைகளில் துரித உணவு விளம்பரங்களை தடை செய்வதில் நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு கவனம் செலுத்தியுள்ளது.
மேற்கு சிட்னி உட்பட பல பகுதிகளில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணம்.
வருடத்திற்கு சுமார் 2,800 சுகாதாரமற்ற உணவுப் பொருட்களின் விளம்பரங்கள், குறிப்பாக பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தி வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் வழியில் மாணவர்களால் பார்க்கப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
சிட்னி பாடசாலை மாணவர்களில் 65 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரித உணவு விளம்பரங்களை குறைத்தால், சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் வரிப்பணத்தை கட்டுப்படுத்த முடியும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.