Sportsபங்களாதேஷை வீழ்த்தியது பாகிஸ்தான் - உலக கிண்ணம் 2023

பங்களாதேஷை வீழ்த்தியது பாகிஸ்தான் – உலக கிண்ணம் 2023

-

2023 – உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 45.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 204 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணியின் சார்பில் Mahmudullah அதிகபட்சமாக 56 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Shaheen Shah Afridi, Mohammad Wasim தலா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்படி, 205 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் Abdullah Shafique 68 ஓட்டங்களையும், Fakhar Zaman 81 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

நன்றி தமிழன்

Latest news

லாஸ் ஏஞ்சல்ஸ் பேரிடர் மேலாண்மைக்கு உதவ தயாராக உள்ள ஆஸ்திரேலியா

லாஸ் ஏஞ்சல்ஸைப் பாதித்துள்ள கடுமையான மற்றும் பேரழிவுகரமான காட்டுத்தீக்கு மத்தியில் அமெரிக்காவுக்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அமெரிக்காவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த உதவத்...

ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என விமர்சித்த எலான் மஸ்க்

கனடாவின் இடைக்கால பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என்று குறிப்பிட்டு எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கும் யோசனையை டொனால்ட் டிரம்ப் தீவிரமாக...

விமானத்தில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற தடை

டிசெம்பர் 18ஆம் திகதி இலங்கையிலிருந்து மெல்பேர்ன் நோக்கி பயணித்த சர்வதேச விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கையர்களுக்கு மெல்பேர்ன் நீதிமன்றம்...

விக்டோரிய இளைஞர்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி

விக்டோரியாவில் ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் புதிய ஓட்டுநர்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை மாநில அரசு தொடங்கியுள்ளது. My Learners Free Lesson...

மலை உச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட 13 நாட்களாக காணாமல் போன ஆஸ்திரேலிய இளைஞர்

நியூ சவுத் வேல்ஸில் ஏறக்குறைய இரண்டு வாரங்களாக காணாமல் போன மலையேறுபவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஸ்னோவி மலைப் பகுதியில் உள்ள கோஸ்கியுஸ்கோ...

2030-இல் மாற்றமடையும் அதிக தேவையுடைய வேலைத் துறைகள்

2030ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் அதிக தேவையுடைய வேலைத் துறைகள் மாறும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அதன்படி, 2030 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் டெலிவரி டிரைவர்கள்,...