NewsQLD - வைக்கோல் பற்றாக்குறையால் NSW விவசாயிகளுக்கு கடும் நெருக்கடி

QLD – வைக்கோல் பற்றாக்குறையால் NSW விவசாயிகளுக்கு கடும் நெருக்கடி

-

காட்டுத்தீ அபாயம் அதிகரித்துள்ள நிலையில், வைக்கோல் தட்டுப்பாட்டினால் குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸில் கால்நடைத் தொழில் தொடர்பான விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

கால்நடைகளுக்கு உணவளிக்க தேவையான வைக்கோலை கொள்வனவு செய்வதற்கு மாதம் ஒரு மில்லியன் டொலர்களுக்கு மேல் செலவிட வேண்டியுள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

விவசாயிகளுக்கு உதவ விரும்புவோர் 1300 327 624 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு நன்கொடை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய இடங்களில் காட்டுத் தீ தீவிரமாக இருப்பதால், வைக்கோலின் தேவை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பல பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் உள்ளதால், அங்குள்ள மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீ அபாயம் காரணமாக குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சுமார் 50 வீடுகள் ஏற்கனவே முற்றாக அழிந்து விட்டதாகவும், தீயை அணைக்கும் பணிகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வறண்ட காலநிலை மற்றும் பலத்த காற்றின் அபாயம் தொடர்வதோடு, தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டல திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Latest news

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...