தற்போதைய மின்னல் காலநிலை காரணமாக விக்டோரியாவின் பல பகுதிகளில் ஆஸ்துமா மற்றும் வைக்கோல் காய்ச்சல் நோயாளிகள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேற்கு மற்றும் தெற்கு கிப்ஸ்லாந்தில் உள்ளவர்கள் மிகவும் ஆபத்தான குழுவாக இருப்பதாக மாநில சுகாதாரத் துறை கூறுகிறது.
மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய வானிலை மற்றும் மகரந்தத்தின் பரவல் அதிகரிப்பதால், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை, ஆஸ்துமா மற்றும் வைக்கோல் காய்ச்சல் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.
ஆஸ்திரேலியாவின் மாநிலங்களில் விக்டோரியாவில் வைக்கோல் காய்ச்சல் அதிக ஆபத்து உள்ளது.
ஆஸ்துமா மற்றும் வைக்கோல் காய்ச்சல் நோயாளிகள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்கவும், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.