வரும் 7ம் தேதி வங்கி வட்டி விகிதம் கண்டிப்பாக அதிகரிக்கும் என பல முன்னணி பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
வரும் வாரத்தில் வங்கி வட்டி விகிதம் 4.35 சதவீதமாக உயரலாம் என 35 பொருளாதார நிபுணர்களில் 33 பேர் கணித்துள்ளனர்.
இதேவேளை, வங்கி வட்டி வீதம் 4.6 வீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக 09 முன்னணி பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கடந்த மாதத்தில் வர்த்தக பணவீக்கம் 1.2 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் பணவீக்கம் கணிசமாக உயர்ந்திருப்பது வங்கி வட்டி விகிதங்களில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார இலக்குகளை பூர்த்தி செய்யாவிட்டால் இவ்வருடம் 13வது முறையாக வட்டி வீதத்தை உயர்த்த வேண்டியிருக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் மிட்செல் புல்லக் தெரிவித்திருந்தார்.