Sportsநியூசிலாந்தை பந்தாடிய தென்னாப்பிரிக்கா - உலக கிண்ணம் 2023

நியூசிலாந்தை பந்தாடிய தென்னாப்பிரிக்கா – உலக கிண்ணம் 2023

-

நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இன்றைய உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 190 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றது.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் Rassie van der Dussen அதிகூடிய ஓட்டங்களாக 133 ஓட்டங்களையும், Quinton de Kock 114 ஓட்டங்களையும் பெற்றனர்.

நியூஸிலாந்து அணி சார்பில் Tim Southee 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி 358 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 35.30 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

நியூசிலாந்து அணி சார்பில் Glenn Phillips அதிகபட்சமாக 60 ஓட்டங்களையும் Will Young 33 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் Keshav Maharaj 4 விக்கெட்டுக்களையும் Marco Jansen 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தனர்.

நன்றி தமிழன்

Latest news

டிரம்ப் பதவியேற்கும் முன் சர்வதேச மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

ஜனவரி 20-ம் திகதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாக, குளிர்கால விடுமுறைக்குப் பிறகு, சர்வதேச மாணவர்கள் தங்கள் வளாகங்களுக்குத் திரும்புமாறு சில பள்ளிகள் அறிவுறுத்தியுள்ளன. பல அமெரிக்க...

இரண்டாவது நாளாகவும் சாதனை படைத்துவரும் MCG மைதானம்

மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்திற்கு (MCG) இரண்டாவது நாளான Boxing Day டெஸ்ட் போட்டியைக் காண ஏராளமான பார்வையாளர்கள் வந்துள்ளனர். அதன்படி முதல் நாளில் Boxing Day டெஸ்ட்...

ஓடும் ரயிலில் இருந்து குதித்த டிரைவர்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே ஓடிக் கொண்டிருந்த அதிவேக ரயிலின் ஓட்டுநர்கள் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அப்போது ரயிலில் சுமார் 400 பயணிகள்...

Boxing Day தினத்தில் வெல்லப்பட்ட $12 மில்லியன் Powerball லாட்டரி

Boxing Day தினத்தன்று நடத்தப்பட்ட Powerball லாட்டரி டிராவின் முடிவுகளில் அனைவரின் பார்வையும் உள்ளது. இதன் மொத்த மதிப்பு 12 மில்லியன் டாலர்கள் ஆகும். அந்த டிராவில் இருந்து...

ஆஸ்திரேலியாவின் மிகவும் விலையுயர்ந்த நகரமாக சிட்னி

ஆஸ்திரேலியாவின் மிகவும் விலையுயர்ந்த நகரமாக சிட்னி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தரவரிசையின்படி, மெல்பேர்ண் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலக நகரங்களில் 88 சதவீதத்தை விட மெல்பேர்ணில் வாழ்க்கைச் செலவு அதிகம்...

விக்டோரியன் லிபரல் கட்சியின் புதிய தலைவராக Brad Battin

விக்டோரியா லிபரல் கட்சியின் புதிய தலைவராக Brad Battin இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அந்தப் பதவியில் John Pesutto இந்தார். இன்றைய கவுன்சிலர்கள் கூட்டத்தில் பெரும்பாலானோரின் நம்பிக்கையின் அடிப்படையில்...