வீசப்படும் கழிவுகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசு கொண்டு வர உள்ள பிரேரணை மக்களிடையே கடும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகற்றப்படும் கழிவுகளின் அளவிற்கு ஏற்ப கட்டணம் வசூலித்து, சிறிதளவு குப்பையை வீசும் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று கருதி இந்த சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
ஆனால் இது வழக்கமான கட்டண முறைக்கு புறம்பானது என்று மாநில மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த பிரேரணையின் மூலம் தெற்கு அவுஸ்திரேலியாவில் குப்பைகளை சேகரிக்கும் செயற்பாடு எந்த வகையிலும் தடைபடாது என அரச பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இது இன்னும் விவாதத்தில் உள்ள ஒரு பிரேரணை மட்டுமே என்பதால், இது எதிர்காலத்தில் பல திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.