ரஃபா கிராசிங் திறக்கப்பட்டதையடுத்து, காசா பகுதியில் சிக்கித் தவித்த 20க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் வெளியேறியுள்ளனர்.
இவர்கள் உட்பட ஏறக்குறைய 300 பேர் எல்லையைக் கடந்து எகிப்து வந்தடைந்ததாகக் கூறப்படுகிறது.
70 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் இன்னும் காஸாவில் உள்ளனர், அவர்கள் அடுத்த மாதத்தில் வெளியேறுவார்கள்.
சுமார் 03 வாரங்களின் பின்னர் ரஃபா நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இதனால் காசா பகுதியில் இருந்து எகிப்து வரும் அவுஸ்திரேலியர்களுக்கு தேவையான வசதிகள் கெய்ரோவில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தின் மூலம் செய்து தரப்படும்.