Sportsஇந்திய அணி 302 ஓட்டங்களால் அபார வெற்றி - உலக கிண்ண...

இந்திய அணி 302 ஓட்டங்களால் அபார வெற்றி – உலக கிண்ண தொடர் 2023

-

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் நேற்று (2) இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 302 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று சாதனை படைத்துள்ளது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் Shubman Gill அதிகபட்சமாக 92 ஓட்டங்களையும், Virat Kohli 88 ஓட்டங்களையும், Shreyas Iyer 82 ஓட்டங்களையும், பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Dilshan Madushanka 5 விக்கெட்டுக்களையும், Dushmantha Chameera 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதன்படி, 358 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 50 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் கசுன் ராஜித்த 14 ஓட்டங்களையும், ஏஞ்சலோ மெத்தீவ்ஸ் 12 ஓட்டங்களையும் மற்றும் மஹீஸ் தீக்‌ஷன 12 ஓட்டங்களையும்பெற்றுக் கொண்டனர்.

ஏனைய அனைத்து வீரர்களும் 10 ஐ விட குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் 5 வீரர்கள் எவ்வித ஓட்டங்களையும் பெறவில்லை.

பந்து வீச்சில் Mohammed Siraj 3 விக்கெட்டுக்களையும், Mohammed Shami 5 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

Latest news

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...

காஸாவில் இதுவரை 60,000 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் மாயம்

காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஒக்டோபர் 7, 2023 முதல் இன்றுவரை குறைந்தது 60,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, என்கிளேவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு...

தன் மகன்களை வேற்றுகிரகவாசிகள் என நினைத்து கொல்ல முயன்ற தாய்

தனது இரண்டு மகன்களைக் குத்திக் கொல்ல முயன்ற தாய்க்கு 15 ஆண்டுகள் மனநலக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடிலெய்டில் வசித்து வந்த ஒரு பெண், தனது இரண்டு மகன்களையும்...

வேப் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளதா?

வேப்பிங் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஜூலை 2024 இல் தொடங்கிய வேப் விற்பனையின் படிப்படியான தடைக்குப் பிறகு...